13.04.2020
புனித பொருளாதாரத்தை செயல் படுத்தவேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உண்ணா விரதமிருந்து வருகிறேன். நான் நாடகத்துறையை சேர்ந்தவனாதலால், இது ஒரு நாடகம் என்றே நீங்கள் நினைக்கலாம். உண்மைக்கு பிணையமாக என்னை தனிமையில் சிறைப்படுத்திக்கொண்டுள்ளேன். உங்களையும் சிந்திக்க வேண்டுகிறேன்.
உண்மையாக இருப்பதற்காக உணவை மறுத்து என்னையே துன்புறுத்திக் கொண்டுள்ளேன். நாம் ஒரு அசுர பொருளாதார கட்டமைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த கொள்கையானது, இயற்கையை அழித்து ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி, நம்மை இயந்திரத்தனமாகி விட்டது. கடவுள் அசுரனை தண்டித்துவிட்டார். அசுரன் செத்துக் கொண்டிருக்கிறான்.
நாம் இந்த அசுரனை வீழ்த்த தயாரா? இயற்கை சார்ந்து வாழ தயாரா? சமத்துவம் என்ற அறத்திற்கு உட்பட்டு சமுதாயத்தை கட்டமைக்க தயாரா?
யோசியுங்கள்! நீங்கள் நேர்மையாக யோசிப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். என்னுடைய இந்த “நாடகத்திற்கு” ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன். தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு தடைகளும் ஊன் விளைவிக்காமல் இணையத்தில் எனக்கு பதிலளியுங்கள்.
இவண்,
பிரசன்னா
கதாசிரியர்,
மேடை நாடக இயக்குனர்,
கிராம சேவா சங்கம்.